சிறுவர் நாடகக் களஞ்சியம் : நெடிய வரலாற்றையுடைய தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர் இலக்கியத்திற்கென்று தனித்த இடமுண்டு. சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என்பதுடன் சிறுவர்களுக்கான நாடகங்களும் சிறுவர் இலக்கியத்தின் அங்கமாக இருக்கின்றன. நாடகக் கலை காட்சிபூர்வமானது என்பதால் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம். நாடகம் வழியாகச் சொல்லப்படும் கருத்துகள் குழந்தைகளின் மனத்தில் அழுத்தமாகப் பதிவதோடு. உண்மையான தாக்கத்தையும் உண்டாக்கும். மு.முருகேஷ் : கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகப் படைப்பாளுமையுடன் எழுதி வருபவர் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான நூல்களோடு, கவிதை சிறுகதை கட்டுரை என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார் தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்டத்திலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மலையாளம்: இந்தி, தெலுங்கு. ஆங்கிலத்தில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பிறந்த இவர் தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். சிறுவர் நாடகக் களஞ்சியம். தமிழில் சிறுவர் நாடகங்கள் அருகிவரும் தற்காலச் சூழலில், இந்தச் சிறுவர் நாடகக் களஞ்சியம் தொகுப்பு. சிறுவர் நாடகங்கள் மீண்டும் புத்தெழுச்சிப் பெறுவதற்கான முன்னெடுப்பாக அமைகிறது.
No product review yet. Be the first to review this product.