ஆட்சிப் பீடத்தின் முன் நிற்கும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலங்களின் போராட்டம்தான் இந்நாடகம். வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்திக்கொள்கிறவர் வெற்றியாளராகிறார்; ஔரங்கசீப் அத்தகைய வெற்றியாளர்! இவ்வெற்றியை அவர் இரத்தக்களரியோடு பெற வேண்டியிருக்கிறது; உறவுகளைத் துண்டாடிச் சுயநலம் பேண வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு விநாடியிலும் தன் இருப்பைத் தானே சோதித்தறிய வேண்டியிருக்கிறது. உளவியல் சிக்கல்களோடு நடக்கும் இவ்வாழ்க்கை பின்னர் தானாகவே ஒரு நாடகமாகிவிடுவது ஓர் அதிசயம்தான். வரலாற்று நிகழ்வுகளினூடே படைப்பூக்கம் மிகுந்த கற்பனையையும் உளவியல் பார்வையையும் செலுத்தி இந்திரா பார்த்தசாரதி இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார். வரலாற்றின் சில திரைகளையேனும் விலக்கி, எழுதப்படாத வரலாற்று உண்மைகளை அல்லது உண்மைகளாக இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை நமக்குக் காட்டுகிறது இந்த நாடகம்.
No product review yet. Be the first to review this product.