ரைபோசோம்
என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப்
பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய
வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக்
கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு
நூல், ஜேம்ஸ் வாட்ஸனின் ‘தி டபுள் ஹெலிக்ஸ்’ நூலைப் போலவே ஒளிவுமறைவற்றது.
போட்டி மனப்பான்மை தன்னையும் பீடித்திருந்ததை வெளிப்படையாகச் சொல்லும்
அவரது நேர்மை, பெரிய பரிசுகளால் ஒருவரின் திறமை சீரழிவதைக் குறித்த அவரது
ஆழமான சிந்தனைகளால் மேலும் துலங்கித் தெரிகிறது. இந்தப் புத்தகம் அறிவியல்
வரலாற்றின் முக்கிய ஆவணமாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும். -ரிச்சர்ட் டாக்கின்ஸ்
No product review yet. Be the first to review this product.