நம்மைச் சுற்றி இருக்கும் எத்தனை எத்தனையோ கருவிகள், வசதிகள் அறிவியல் தந்தவைதான். நாம் அன்றாடம் சுவைக்கும் சாம்பாரிலும் நமக்குத் துணிகளைத் தரும் கைத்தறி இயந்திரத்திலும் என்ன அறிவியல் இருக்க முடியும்? இப்படிப் பல்வேறு அம்சங்களில் பொதிந்திருக்கும் அறிவியலை இந்த நூலில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். அறிவியல் என்பது ஆய்வகங்களில் மட்டும் மேற்கொள்ளப்படுவதல்ல. அது நம்மைச் சுற்றி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நடைமுறை அறிவியல் வளர்ச்சிகள் குறித்து அறிவியலாளர்கள் இன்னும் அதிகமாக எழுதுவதற்கு இந்த நூல் ஒரு தொடக்கமாக அமைந்தால் சிறப்பு
No product review yet. Be the first to review this product.