இப்புதினத்தில் ஆதிகாலக் காட்டு வாழ்க்கையின் பிரதிநிதிகள் பாதங்கி, ரஞ்சா, மதுரா, நிமேஷ், பகன், அர்ஜமா முதலியோர். சமகாலப் பிரதிநிதிகள் ரஞ்சா, ஈஷா, நிஷித், சமீர் முதலியோர். இவர்களை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆண், பெர் வேறுபாடு எதற்கு? இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது? எப்படி? இதன் வரலாறு மிகவும் பயங்கரமானது. இதற்குத் தீர்வு என்ன? எந்தத் தவற்றின் காரணத்தால் மனித இனம் நாகரீகமடைய முடியாமல் போகிறது? இப்புதினம் இதைப் போன்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறது. இப்புதினத்தின் ஆசிரியர் பாணி பசு, 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். படிப்பும் வேலையும் கல்கத்தாவில். முதலில் லேடி ப்ரொபோர்ன் கல்லூரியிலும் பின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆங்கில இலக்கியம் பயின்றார். ஹவுராவில் உள்ள விஜய் கிருஷ்ணா பெண்கள் கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் தமது மாணவப் பருவத்திலிருந்தே மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். 1980ஆம் ஆனர்டு "ஜன்ம பூமி மாத்ரு பூமி” என்ற தலைப்பில் இவரது முதல் சொந்த படைப்பு வெளிவந்தது. பல புதினங்கள் படைத்துள்ள இவருடைய சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவர் சிறுவர்களுக்காகவும் நிறைய எழுதியுள்ளார். தாராசங்கர் விருது (1997), ஆனந்தா விருது (1997), பங்கிம் சந்திரர் விருது (1998), சாகித்திய அகாதெமி விருது (2010) முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
No product review yet. Be the first to review this product.