மலையாள இலக்கியத்தின் பிதாமகன் வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மதில்கள்'. அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான 'மதிலுகள்' சினிமாவின் மூலம் இந்தக் கதைதான்.
சுகுமாரனின் தரமான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. அரசுக்கு எதிராக எழுதி வந்ததால், ராஜதுரோக வழக்கு ஒன்றில் இரண்டு வருடக் கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு அரசியல் கைதியாக சிறை செல்கிறார் ஓர் எழுத்தாளர். அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே பெரிய மதில் சுவர். பெரும் துயரோடு மதில் சுவரை வெறித்தபடி மரங்களோடு பேசிக்கொண்டிருக்கும் அவருக்கு, மதில் சுவருக்கு அப்பாலிருக்கும் பெண்கள் பிரிவிலிருந்து ஒரு பெண் குரல் வயப்படுகிறது.
‘நாராயணீ” என்று அறிமுகமாகும் அந்தப் பெண்ணின் குரலில் கரையும் எழுத்தாளர், அவர் மீது காதல்கொள்கிறார். நாராயணியும் இவர் மேல் காதல் கொள்கிறார். இஷ்டம் முதல் இச்சை வரை சகலத்தையும் உரையாடல் மூலமே தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு வியாழக்கிழமையில் பகல் 11
மணிக்கு சிறை மருத்துவமனையில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் காத்திருக்கிறார்கள் இருவரும். அந்த நாளுக்காகக் காத்திருக்கும்போது, எழுத்தாளரை ஓர் அதிர்ச்சி தாக்குகிறது!
பெரும் மதில் சுவரின் இருபக்கமும் கசியும் காதலை, உரையாடலை, சிறை வாழ்வை எள்ளல் நடையில் மனதில் புகுத்துகிறது பஷீரின் படைப்புலகம்.
ஆரம்பித்த சுவடே தெரியாமல் கடகடவென உருண்டோடி சடுதியில் முடிந்து மனதில் ஒரு பாரத்தை இறக்கிச் செல்கிறது கதை.
No product review yet. Be the first to review this product.