வேடிக்கை கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமாவின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.
No product review yet. Be the first to review this product.