குடும்பத்தை மையப்படுத்திய இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த அயர்லாந்துச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. கண்டிப்பும் சிடுசிடுப்பும் கொண்ட மைக்கேல் மோரன் அயர்லாந்தின் குடும்பங்களில் அப்போது இயல்பாக நிலவிய ஆணாதிக்கப் போக்கின்படியே செயலாற்றுகிறார். அவரது பார்வைகளும் முடிவுகளும் வீட்டிலிருக்கும் பெண்களைப் பாதிக்கின்றன. கால மாற்றத்தில் அயர்லாந்துச் சமூகத்தில் ஆணாதிக்கத்தின் பிடி தளர்கிறது. இந்த மாற்றத்தின் தாக்கம் மோரனின் குடும்பத்திலும் பிரதிபலிக்கிறது.
‘பெண்கள் நடுவே’ இந்த மாற்றத்தை மிக அழகாக விவரிக்கிறது. அயர்லாந்துச் சமூகத்தில் ஒரு காலப்பகுதியின் சுருக்கமான, சுவை குன்றாத சித்திரமாக அமைந்திருக்கும் இந்த நாவலை நேர்த்தியும் எளிமையும் கூடிய மொழியில் தந்திருக்கிறார் அசதா.
No product review yet. Be the first to review this product.