குமரி Kumari
எழுத்தாளர் : வ.கீரா
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த நாவல் வியப்பூட்டுகிறது. நம்மிடம் இப்போது இல்லாதுபோன அலங்கு என்கிற நாய் இனம், பலவிதமான யாளிகளான மகர (ஆடு) யாளி, சிம்ம யாளி, யானை யாளி பற்றிய இந்த நாவலில் வரும் விவரணைகள், அழிந்துபோன டைனோசர்கள், சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் விலங்கு, நற்றினையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன ஜப்பானியர்கள் உருவகப்படுத்துகிற டிராகன் ஆகியவைபோல, தமிழ் இலக்கியங்கள் பேசுகிற யாளிகள் கற்பனை மிருகமா அல்லது அப்படி ஒரு விலங்கு வாழ்ந்து அழிந்துவிட்டதா? வரலாற்றின் மீதான புனைவுகள் மிக அவசியமான ஒன்று. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சேர சோழ பாண்டியர்கள் மீதான புனைவுகளுக்கே பழக்கப்பட்ட நமக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளின் மீதான புனைவு என்ற வகையில் ‘குமரி’ மிகவும் அவசியமான ஒன்று. -கரன் கார்க்கி