Skip to product information
டார்க்நெட் Darknet

டார்க்நெட் Darknet

Rs. 166.00

டார்க்நெட் என்றவுடன் நமக்கு ஒரு பயம் வருகிறது. சைபர் கிரிமினல்கள், சைக்கோகள் உலவும் இடம் என நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் டார்க்நெட்டிற்கும் மறுபக்கம் உள்ளது. அது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆச்சரியமாக இருந்தால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முனையுங்கள்.

* டார்க்நெட் இயங்கக் காரணமாக இருப்பது அமெரிக்க ராணுவம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* டார்க்நெட் இயங்க நிதி கொடுப்பது அமெரிக்க அரசாங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன் நிதி கொடுக்க வேண்டும்?

* டார்க்நெட் எப்படி எங்கே தோன்றியது? அதை இயக்குபவர்கள் யார்?

* அமெரிக்காவின் முன்னணி நாளிதழான The Newyork Times டார்க்நெட் பக்கத்தைத் தொடங்கியது ஏன்?

* டார்க்நெட்டை இயக்கும் அகோரிஸம் பற்றித் தெரியுமா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் செல்லும் பயணம்தான் இந்தப் புத்தகம். வாருங்கள்! சைபர் பாதாள உலகத்தினுள் நுழைவோம்.

You may also like