ஆட்டனத்தி
எழுத்தாளர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
1970களின் தொடக்கத்திலிருந்து எழுதி வரும் வண்ணநிலவனின் புதிய சிறுகதைத் தொகுப்பு இந்த நூல். சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை இலக்கியமாக மாற்றும் கலையில் தேர்ந்தவர் வண்ணநிலவன். தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகும் சகமனிதனைப் போற்றுவதற்கான அன்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் மனிதர்களே வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் ஒலித்த மென்மையான குரலும் உணர்ச்சிவசப்படாத யதார்த்தப் பார்வையும் இத்தொகுப்பிலும் காணப்படுகின்றன. இதில் இடம்பெறும் 11 கதைகளும் வேறுவேறு காலங்களிலும் இடங்களிலும் நிகழ்கின்றன. மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான மனநிலையை உருவாக்கும் சூழலும் புறவுலகை ஒரு சாட்சியாக நின்றுபார்க்கும் மனோபாவமும் கூடிய இந்தக் கதைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை. கட்டபொம்மன், மேனகை ஆகிய பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் புதிய பார்வைகளையும் திறப்புகளையும் தருகின்றன.