Skip to product information
அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

Rs. 240.00

கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழுகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டபோது படைப்பாளர்கள் பக்கம் நின்று எழுதியவை இவை. சல்மான் ருஷ்டி பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. கருத்துரிமை தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விவாதிக்க வேண்டிய காலம் இது.
பொதுமனதில் பதிந்துள்ள விழுமியங்கள் பற்றியும் சாதியச் சமூகத்தின் தனித்த இயல்புகள் குறித்தும் இக்கட்டுரைகள் பெரிதும் பேசுகின்றன. சட்டம், தீர்ப்புகள் மட்டுமல்லாமல் பொதுப்புத்தி சார்ந்தும் சாதியத்தைத் தொடர்புபடுத்தியும் கருத்துரிமைப் பிரச்சினைகளை விவாதிக்கும் இந்நூல் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது.

Language :Tamil

Author : பெருமாள் முருகன்

Publication : காலச்சுவடு பதிப்பகம்

You may also like