எஃபெந்தி
Language : Tamil
Author: முஹம்மத் ரியாஸ்
Publisher Name : Ethir Veliyeedu
கரையும் கடலுமாய் அலைவுறும் கடலோடிகளின் வாழ்வு கண்ணீருக்கும் தண்ணீருக்கும் நடுவில் உவர்ப்புடன் ஊடாடும் ஒரு தனிமையான படகு. முரசறைந்து சங்கு முழங்கி முத்துக்களுடனும் மீன்களுடனும் கரைக்குத் திரும்பும் அவர்களது மரபுகள், சடங்குகள், அரசியல், பண்பாட்டுக் கூறுகள் புனைவெழுத்தில் உச்சம் தொட வேண்டியவை.
அவ்வகையில் துருக்கியர் வழங்கும் உயரிய பட்டமான ‘எஃபெந்தி’ யைச் சூடிக்கொள்ளும் முஹம்மது ரியாஸின் இந்த முதல் நாவல் கட்டமைக்கும் புனைவுலகம் இலங்கைக்கு சற்றுக் கீழ் தென் தமிழகத்தின் ‘ஷீத் ரஸ்தா’ [எ] பழைய சேதுபதி சாலையை ஒட்டி அலையாத்திக்காடுகள் சூழ்ந்த ‘முத்துக்குடா’ எனும் கடல் முகத்துவாரம். அதற்கு மேல் வாழ்ந்த மறைக்காயர்கள் குறித்த கதையாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு அதிகம் அறிமுகம் இல்லாதவை.
‘கொடிமர பிறை தேடும் நாள்’ தொடங்கி ‘கொடியிறக்கம்’ வரை கவுச்சியடிக்கும் பட்டின மனிதர்களின் உரையாடல்கள் வழியாக ஆழ்கடல் கழிஓதமாய் ஓடும் இந்த நாவலின் மொழியும் கதாபாத்திரங்களும் வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரக்கூடியவை.
அனீஸ்
திரைப்பட இயக்குநர்