கோல்வால்கர் - கட்டுக்கதைகளின் நாயகன்
Language : Tamil
Author: திரேந்திர கே. ஜா
Translator: இ. பா. சிந்தன்
Publisher Name : Ethir Veliyeedu
“ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அதன் தொடக்க காலத்தில் தலைமையேற்று நடத்தியவராகவும், அதன் செல்வாக்குமிக்க நபராகவும் அறியப்படுகிற எம்.எஸ்.கோல்வால்கரைப் பற்றி மிக ஆழமான ஆய்வினை மேற்கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் திரேந்திர கே. ஜா. மதச்சார்பற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் உருவாகியிருந்த புதிய இந்தியாவில், கோல்வால்கரின் பேராசை, வெறுப்புணர்வு, பதற்றம், குறுகிய மனப்பான்மை ஆகியவை அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பரிமாணங்களைத் திரேந்திர கே. ஜாவின் எழுத்து நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தியப் பிரிவினை மற்றும் காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் லட்சியங்கள் முறியடிக்கப்பட்டன. அதன் விளைவாகவே, பண்பாட்டு ரீதியான, அரசியல் சாராத மற்றும் தேசபக்தி அமைப்பாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, நாடு முழுவதிலும் தன்னுடைய கிளைகளை ஆர்எஸ்எஸ் பரப்பியது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் திரேந்திர கே. ஜா நிறுவுகிறார். ஏராளமான தரவுகளைத் திரட்டி ஜா வழங்கியுள்ள இந்த நூல், நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள விழையும் இன்றைய காலத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்லாமல், இனிவரும் எதிர்காலத் தலைமுறையினரும் வாசிக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான படைப்பாகும். இன்றோ அல்லது இனிவரும் காலத்திலோ நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரும் வாசித்தே ஆகவேண்டிய மிக முக்கியமான ஒரு ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறார் திரேந்திர கே. ஜா.”
- தாமஸ் ப்ளொம் ஹன்சன்