Skip to product information
கோபல்லபுரத்து மக்கள் (காலச்சுவடு)

கோபல்லபுரத்து மக்கள் (காலச்சுவடு)

Rs. 390.00

எழுத்தாளர் : கி. ராஜநாராயணன்

பதிப்பகம் :  காலச்சுவடு பதிப்பகம்

கோபல்லபுரத்து மக்களின் எளிமையும் வெள்ளந்தி மனமும்தான் இந்த நாவலின் உயிரோட்டம். அந்தக் கிராமத்தின் ஆன்மாவைத் தன் எழுத்தால் கி.ரா. படம் பிடிக்கிறார்.

மண் ஒன்றானாலும் மனங்கள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தப் பிளவை நாட்டில் நடக்கும் விடுதலைப் போரோடு இணைக்கிறார்; கோபல்லபுரத்தாரால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும் தலைவர்களின் நோக்கையும் போக்கையும் கண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் விரிவடைகிறது.

‘கோபல்ல கிராமம்’ நாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த நாவலில் சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதைத் தனக்கே உரிய நடையில் சொல்கிறார் கி.ரா. ஒவ்வொரு வரியிலும் மண் வாசனை வீசும் இந்த நாவல் தமிழின் சிறந்த வட்டார வழக்கு நாவல்களில் ஒன்று என்னும் சிறப்பையும் பெற்றது.

1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது.

You may also like