கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை
Author : ம.பொ. சிவஞானம்
Publisher : We Can Books
விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் குறிப்பிட வேண்டியவர்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஒருவர். வழக்கறிஞ்ர் பணியில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்த அவர், குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.
வ.உ.சி அவர்கள் பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார். இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை அவர் கிடைத்தது. அந்த தண்டனை மேல் முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது. கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின; சணல் நூற்று, கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.
அவர் இறக்கிற பொழுது மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே உயிர் துறந்தார்.