Skip to product information
குடியேற்றம்

குடியேற்றம்

Rs. 300.00

எழுத்தாளர் : தோப்பில் முஹம்மது மீரான்

பதிப்பகம் :  காலச்சுவடு பதிப்பகம்

தோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ்செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது. சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா? சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எது? இவற்றின் முரண்களைத் தன் அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலம் இக் ‘குடியேற்றம்.’ - களந்தை பீர்முகம்மது

 

You may also like