Skip to product information
மாயம்

மாயம்

Rs. 220.00

பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை.

இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை.

ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

Language :Tamil

Author : பெருமாள் முருகன்

Publication : காலச்சுவடு பதிப்பகம்

You may also like