ப்ராஜெக்ட் ரெட்
எழுத்தாளர் : கண்பதி நடராஜ்
PROJECT RED - "ஒரு சாமானியனின் சிக்னல் புரட்சி" சட்டத்தின் எல்லை மூடிவடையும் இடத்தில்... தர்மத்தின் பயணம் தொடங்குகிறது!
சாலை விபத்துகள் வெறும் செய்திகள் அல்ல; அவை சில நொடிகளில் பல குடும்பங்களின் வாழ்வைப் புரட்டிப்போடும் எதார்த்தங்கள். தவறு செய்தவர்கள் எளிதாகத் தப்பிவிடும் ஒரு சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்குப் பதில் தேடிப் புறப்படும் ஒரு நேர்மையான போக்குவரத்து காவலனின் கதை இது.
சாலை விபத்துகளைத் தடுக்க அவன் உருவாக்கிய 'ப்ராஜெக்ட் ரெட்" (PROJECT RED) தொழில்நுட்பம் நிராகரிக்கப்படும்போது. நீதிக்கான மாற்றுப் பாதையை அவன் தேர்ந்தெடுக்கிறான். உடல்ரீதியான காயங்கள் சில நாட்களில் ஆறிவிடலாம்; ஆனால், ஒருவன் செய்த தவறின் வீரியத்தை அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது? அதற்கான விடைதான் காசிமேட்டின் ஒரு சாதாரண குடோனில் இயங்கும் "ரெட் ரூம்"
உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல், செய்த குற்றத்தை மூளைக்குள் ஆழமாக உணர வைக்கும் உளவியல் உத்திகள், டார்க் வெப் (DARK YWEB} மூலம் உரியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கும் டிஜிட்டல் முறைகள் என எதார்த்தமான பின்னணியில் இந்த எமோஷனல் டெக்- நெய்ர் (TECH-NOIR) கதைக்களம் பயணிக்கிறது.