Skip to product information
கபர்

கபர்

Rs. 150.00

கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. – பேரா. எம்.கே. ஸானு தனிப்பட்ட வாழ்க்கை முதல் தேசிய வரலாறு வரையான பல்வேறு உலகங்களில், நீதியின் எத்தனையோ கல்லறைகளுக்குமேல் நாம் மௌனிகளாக வாழ்கிறோம் என்ற சுட்டெரிக்கும் புரிதலுக்கு அழகானதும் முனை கூர்மைப்பட்டு நிற்பதுமான தன்னுடைய எடுத்துரைப்பின் வழியாக கே.ஆர். மீரா நம்மை அழைத்துச் செல்கிறார். நமது சமகால தேசிய வாழ்க்கையின் கொடிய வஞ்சனைக்கும் மனித அனுபவங்களின் பிரித்தறியமுடியாத கலவைக்கும் களமாக தனித்துவமான ஓர் இடத்தை வளர்த்தெடுத்துக்கொண்டு, கபர் நாவல் மலையாளக் கற்பனையின் வெற்றிக் கொடியை மேலும் உயர்த்திக் கட்டியிருக்கிறது. – சுனில் பி. இளயிடம்

You may also like