Skip to product information
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
Rs. 225.00
எழுத்தாளர் : அ.கா. பெருமாள்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தைக் கோட்டிக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசியப் பதிவுகள் மூலப்பனுவல்களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படுத்தாது. சீதையை மறுபடியும் காட்டுக்கு அனுப்பியது நாட்டார் பாடகனுக்குக் கொடுமையாகத் தெரிகிறது. அவன் அதை நியாயப்படுத்தவில்லை. சீதையின் துக்கம் அவனை ஆவேசப்படுத்துகிறது. கர்ணன் பிறப்பின் காரணமாக ஒதுக்கப்படுவது நாட்டார் பாடகனுக்குத் தாங்க முடியவில்லை. இவற்றையெல்லாம் எளிமையாகக் கதைசொல்லியின் உத்தியுடன் இந்நூல் விவரிக்கிறது.