Skip to product information
சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

Rs. 70.00

 

 

உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை  உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம் செய்ய வைப்பது, எழுத்தாளரை கண் காணாத இடத்துக்கு தூக்கிப்போய் வதைப்பது என்று இந்த அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் பன்முகத் தாக்குதலாய் விரிகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் தனிமனித உரிமைக்கும் விடப்பட்டு வருகிற இச்சவாலை ஜனநாயகச் சிந்தனைக் கொண்டவர்கள் எதிர்க்கொண்டு முறியடிப்பார்கள் என்பது வெறும் நம்பிக்கையல்ல, உலகெங்கும் வரலாறு நெடுகிலும் அதுவே நடந்திருக்கிறது. பாதுகாப்பான அந்த நற்காலம் உதிக்கும்வரை முடங்கிக் கிடக்காமல் கலை இலக்கியவாதிகள் தத்தமக்கேயுரித்தான படைப்பூக்கத்தில் புதிது புதிதான வடிவங்களையும் களங்களையும் கதாப்பாத்திரங்களையும் உருவாக்கி இந்தச் சமூகத்தோடு தங்களது வீரியமான உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருப்பதற்கான சாத்தியங்களை முன்மொழிகிறது உமர்பாரூக்கின் இந்தக் கதை.

You may also like