Skip to product information
சூப்பர் 30 ஆனந்த் குமார்

சூப்பர் 30 ஆனந்த் குமார்

Rs. 100.00

தமிழில் : அரவிந்தன்

எழுத்தாளர் : பிஜு மாத்யு

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார், தனது ஏமாற்றத்தை எதிர்கொண்ட விதம் தனித்தன்மை கொண்டது. புதுமையான கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு 2002இல் ‘சூப்பர் 30’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். சமுதாயத்தில் அடித்தட்டு நிலையைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐஐடி - ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதப் பயிற்சி அளித்தார். அவர்களின் திறமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார். கல்வியின் மூலம் வறுமையிலிருந்து மேலே வர முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். சூப்பர் 30இன் வெற்றி விகிதம் பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 பேரில் 27 - 28 பேர் தேறிவருகிறார்கள்.

 

You may also like