வாசனை
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி 1955முதல் 2004வரை ஐம்பது ஆண்டுகளில் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அவருடைய கதையுலகம், எழுத்து முறை, மொழி, கதைக்களம், கதைகளில் வெளிப்படும் பார்வை, கலைத்திறன் ஆகியவை காலப்போக்கில் எவ்வாறு மாறிவந்திருக்கின்றன என்பதைக் காட்டும் மாதிரிகள் இவை.
தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்த ஒரு படைப்பாளியின் இலக்கியப் பயணத்தின் தடங்களை இக்கதைகளில் காணலாம். காலம் கடந்து நிற்கும் தன்மையும் மறு வாசிப்புகளில் புதிதாக வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்தக் கதைகள் கிளாசிக் தொகுப்பாக வெளியாகின்றன. இக்கதைகளின் அழகியல் கூறுகள், மொழி நேர்த்தி, நுட்பமான அவதானிப்புகள், பாத்திர வார்ப்புகள் ஆகியவற்றின் மூலம் வாசகர் பெறும் கலையனுபவம் அபூர்வமானது..