Skip to product information
வெல்கம் டு மில்லெனியம்

வெல்கம் டு மில்லெனியம்

Rs. 180.00

எழுத்தாளர் : அரவிந்தன்

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை.

இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள் அவர்களுடைய அகத்திற்குள் கச்சிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளுக்குள் இவர்கள் அதிர்வின்றி நழுவிச் செல்கிறார்கள். இந்த மாற்றத்தை அரவிந்தன் கச்சிதமான வரிகளில் உணர்த்திச் சொல்கிறார்.


மிகுதியும் உளவியல் தன்மை கொண்ட இந்தக் கதைகளை உளவியல் கோட்பாடுகளின் வழியே பார்க்கையில் புதிய கோணங்கள் தோன்றினாலும், இந்தக் கோட்பாடுகளில் மதிப்போ ஆர்வமோ இல்லாதவர்களும் நெருக்கமாக உணரக்கூடிய வகையில் இந்தக் கதைகள் உள்ளன

 

You may also like