யாறு
Language : Tamil
Author: சுபி
Publisher Name : Ethir Veliyeedu
இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு சிறுகதைகளும் சுதந்திர மனப்பான்மையில் வேறுவேறு விதமாக எழுதிப் பார்க்கப்பட்டவை. ஒரே சாயலில்லாத மொழிநடையும், கதைகூறும் உத்தியும் கொண்டவை.
பெருநகரமும் கிராமமும் சார்ந்து நம் பார்வையில் அன்றாடம் தென்படும் கதாபாத்திரங்கள்தான் இச்சிறுகதைகளின் பிரதானக் கதாபாத்திரங்கள். அதேவேளை அக்கதாபாத்திரங்களின் அசாதாரண சூழ்நிலைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் வாழ்வின் சீர்குலைவுகளையும் ஆழ்மனமுரண்களையும் விடுதலை வேட்கைகளையும் நம்பகத்தன்மையான முறையில் நுட்பத்துடன் விவரிக்கின்றன. இன்னும் கிராமத்து நிலத்தில் நிலவும் ஆதித்தொன்ம சடங்குகளும், அமானுட சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் கதைப்போக்கில் பின்னி எதார்த்தமாக விரவிக்கிடக்கின்றன. ஆண் பெண் குடும்ப உறவுநிலைகளைக்கூட அதீதக் கற்பனைப் போர்வை போர்த்தாமல் நடைமுறைத்தன்மையுடன் உளச்சிக்கலின் வழியாக மௌனமாக நகர்த்தி ஆராய்கின்றன. மேலும் இக்கதைகள் எவ்வித மொழிச்சிடுக்குப் பாவனைகளுமற்று நேரடியாகக் கதைகூறும் உத்தியில் எழுதப்பட்டவை. இஸங்கள் சார்ந்து குழப்பாமல் அதிகப்பிரசங்கித்தனமாக உபதேசம் சொல்லாமல் இயல்பான தொனியில் சென்றும் முடிவைத் தேடுகின்றன.
- என். ஸ்ரீராம்