"நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நமது உறவுக்கு இந்த தேசத்தில் ஒரு பெயர் கூடக் கிடையாது. இது நம் விருப்பம், நம் தேர்வு. ஆனால் குழந்தை என்பது பெரிய விஷயம். அதன் அடையாளச் சிக்கலுக்கு நாமே காரணமாகிவிடக் கூடாது. இனிஷியல் அல்ல பிரச்னை. இது இருப்பியல் பிரச்னை."
இதுவரை வெகுஜன வாசகர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளிலேயே மிகவும் அபாயகரமானது என்றால் அது, பாராவின் 'ரெண்டு'தான். குங்குமம் வார இதழில் இந்நாவல் தொடராக வெளி வந்தபோது, எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஏராளம்.
பெயரிட முடியாத ஒரு நூதன உறவின் சிக்கல்களை உளவியல் நோக்கில் அலசி ஆராயும் நாவல் இது. மிகத் திறமையாக, லாகவமாக, கத்தி மேல் நடப்பது போல எழுதிச் செல்கிறார் பாரா.
No product review yet. Be the first to review this product.