தைமூர். உலகம் மறக்க நினைக்கும் ஒரு சர்வாதிகாரி. தைமூரியப் பேரரசை உலகம் முழுதும் நிறுவ விரும்பியவர்.
தைமூர் மேற்கொண்ட போர்களையும், தைமூரின் ராணுவ வெறிச்செயல்களையும், தைமூர் செய்த படுகொலைகளையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் இன்னொரு பக்கம் இருக்கும், தைமூருக்கும் அது பொருந்தும். தைமூரின் கலைப் பங்களிப்பையும், நிர்வாகச் சிறப்புகளையும், தலைமைப் பண்புகளையும் சுட்டிக் காட்ட இந்த நூல் தவறவில்லை.
தைமூர் வரலாற்றில் எப்படி நினைவுகூரப்படுகிறார்? வெற்றியாளராகவா? கொடுங்கோலனாகவா? தைமூரின் வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில் எழுதி இருக்கும் ப.சரவணன் காய்த்தல் உவத்தல் இன்றி இந்தக் கேள்விக்கு பதில் காண முயன்றிருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.