தன்னைக் காட்டிலும் பதினேழு வயது மூத்த பெண்னான மியுவோடு காதலில் இருக்கிறாள் சுமிரே. கவர்ச்சிகரமான பெண் என்பதோடு மியு ஒரு திறமையான தொழிலதிபராகவும் இருக்கிறாள். எழுத்தாளராக விரும்பும் சுமிரேவோ தற்கால வாழ்க்கைச்சூழலோடு தன்னைப் பொருத்திக் கொள்ளவியலாதவளாக இருக்கிறாள்.
சுமிரேவின் நெருங்கிய நண்பன் கே. வாழ்க்கை குறித்த தன்னுடைய அத்தனை சந்தேகங்களையும் கே-வோடு விவாதிக்கிறாள் சுமிரே, மியு மீது தனக்கிருக்கும் காதலைப் பற்றியும். கே-வோ உள்ளூர சுமிரே மீது காதல்வயப்பட்டிருந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை.
மியுவும் சுமிரேவும் வியாபார நிமித்தம் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் போகிறார்கள். திடீரென ஒருநாள் சுமிரே காணாமல் போகிறாள். கே-வைத் துணைக்கழுத்துக்கொண்டு மியு சுமிரேவைத் தேடத்தொடங்குகிறாள்.
கண்களைத் திறந்தவாறே காணும் ஒரு கனவென விரிகிறது இந்தப் புதினம். தர்க்கத்துக்குள் அடங்காத அசாதாரணமான சூழல்களையும் படிமங்களையும் அவற்றின் உணர்வுத்தீண்டல்களையும் வாசகனுக்குக் கடத்துவதில் எப்போதும்போல வெற்றி பெறுகிறார் முரகாமி.
No product review yet. Be the first to review this product.