தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா? அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப் பயன்படுத்துகிற மின்சாரம் உள்ளிட்ட எல்லா நுட்பங்களும் இந்தத் தொடக்க உரசலைத் தாண்டி வந்தவைதான் என்கிற உண்மையை நினைவில் கொண்டால், அந்த அச்சத்தைச் சற்று விலக்கலாம், புதுமைகளைத் திறந்த மனத்துடன் அணுகலாம். தொழில்நுட்ப மாற்றங்களைக் கூர்மையாகப் பார்த்து எளிமையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.
No product review yet. Be the first to review this product.