1930 களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை தந்தை பெரியார் முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது. அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்தது. இதன்படி குடிஅரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும், கண்ணம்மாவையும் கைது செய்தது. வாழ்நாள் முழுவதும் சிறைவைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த காலமே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.