தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப் பிரபஞ்ச அனுபவங்களாக மாற்றிய உலக சஞ்சாரி; எண்ணவோட்டங்களின் அழுத்தத்தால் மனப்பிறழ்வின் ஆழ் வெளிகளுக்குள் தூக்கியெறியப்பட்ட பஷீர் எனும் மானுட மனம், பல்வேறு கால நகர்தல்களினூடே பயணப்பட்டபோது புனைந்த சிறுகதைகள், நம்பூதிரியின் கோட்டோவியங்கள், எம்.டி. வாசுதேவன் நாயர், எம்.என். விஜயன் கட்டுரைகள், அபூர்வப் புகைப்படங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்.
No product review yet. Be the first to review this product.