வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவன் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். நிம்மதியான வாழ்க்கை வாழ்க்கை நிச்சயமாக அப்படிப்பட்டவர்களுக்கு இருக்காது. அவர்களின் உலகம் வேறு. அங்கு அவர்களைப் போன்றவர்கள் மட்டுமே செல்ல முடியு. அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில்.தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்த நாவல், சொந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் ஏவும் வேலையை ஏனென்று கேட்காமல் செய்து முடிக்கும் இரண்டு அடியாள்களையும் மையமாகக் கொண்டு விரிகிறது.தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடங்கி அதற்காக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களின் பழிவாங்கல், கடத்தல் என தன் விறுவிறுப்பான எழுத்து நடையில் தந்திருக்கிறார் நரன்.பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து, சமுத்திரம், கொடிமரம் ஆகிய நான்கு மனிதர்களை மையமாகக்கொண்டு, 1980களில் நடக்கும் கதையாகப் பின்னப்பட்டுள்ளது. ஜூனியர் விகடனில் வெளியான தொடரின் தொகுப்பு நூல் இது. இதைப் படிக்கும் வாசகர்களையும் அந்த காலகட்டத்துக்கே அழைத்துச் செல்லும் விதத்தில் புனையப்பட்டுள்ளது.பகையுணர்ச்சியுடன் உலாவரும் வேட்டை நாய்களின் வேட்டைக் களத்தைக் காணச் செல்லுங்கள்.
No product review yet. Be the first to review this product.