Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்

(0)
Price: 400.00

In Stock

SKU
ETHIR 082
நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் - ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என. உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு, ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம்.

“மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல். ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது... இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம், கட்டமைவு, மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன்.”

– ஸ்டீபன் ஹ்யூ-ஜோன்ஸ். (நியூ ஸ்டேட்ஸ்மென்).



மனித நாடகங்களைக் காட்சிப்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்கது, மனத்தை அரிக்கும் அங்கதம் மற்றும் கூர்மையான வசனங்கள்.

- மில்ட்ரெட் ஆடம்ஸ்,( நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனம்).
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.