‘மறக்கவேண்டும் என்றால் இதை வாசிக்க வேண்டும்’ - எலினார் ரூசோவெல்ட் பெருங்களப்பலியைச் சொல்லும் படைப்புகள் ஹாலோகாஸ்ட் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. அவை நமக்குப் பரவலாகக் கிடைப்பதற்கு முன், எழுத்தாளரும் பெருங்களப்பலிக் கொடுமைகளிலிருந்து தப்பித்தவருமான ராக்மில் பிரிக்ஸ், இரண்டாம் உலகப்போரின் போது தாம் கண்ட நிகழ்வுகளை வாக்குமூலமாக இந்தக் குறுநாவல்களில் பதிவு செய்கிறார். முதலில் 1959இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பிறகு அவருடைய படைப்புகள் நீண்ட காலமாகக் கிடைக்கவில்லை. பிரிக்ஸின் தெளிவுமிக்க கதைகள், லாட்ஸ் யூதக் குடியிருப்பிலும் ஆஷ்விட்ஷிலும் நிலவிய யூத மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன; மனிதனின் சகிப்புத்தன்மை அதன் எல்லைகளைத் தொடும் போது எழும் சிறியதும் பெரியதுமான அபத்தங்களை நகைச்சுவையும் சோகமும் கலந்த பாணியில் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன - முட்டைக்கோஸின் இலைகளால் தயாரிக்கப்பட்ட ‘பூனைக்கறி’யை சமைத்து, யூத மக்களைக் கலவரமடையச் செய்வது முதல் அவர்களுடைய அழிவின் பல்வேறு நிலைகளில் ஒத்துழைக்குமாறு அவர்களையே வற்புறுத்துவதுவரை. நம்மை ஏமாற்றும் அளவிற்கு எளிமையான, பல தருணங்களில் நகைச்சுவை மிகுந்த இந்தக் குறுநாவல்களின் செயல்பாடு மந்தநிலை, கண்ணியம் காத்தல், பிழைத்திருத்தல் என அந்தக் காலகட்டத்தில் நிலவிய பெரும் ஒழுக்கக்கேடுகளால் விளைந்த தர்மசங்கடங்களை நுட்பமாகப் பிரதிபலிக்கின்றன. அத்துடன் தைரியம், நேர்மை, மாற்று வடிவம், இருண்ட நகைச்சுவை ஆகியன கொண்ட ‘சேரியின் பூனை’ பெருங்களப்பலி அனுபவத்தின் மிகவும் அழுத்தமான மதிப்பீடுகளை முன்வைக்கின்றன. இந்த மொழிபெயர்ப்பில் பிரிக்ஸின் புகழ்பெற்ற நான்கு குறுநாவல்களும் தொடக்ககாலக் கவிதை ஒன்றும் இடம்பெறுகின்றன.
No product review yet. Be the first to review this product.