மணிக்கொடி எழுத்தாளர், புதுக்கவிதை முன்னோடி என்று சிறப்பிக்கப்படும் ந. பிச்சமூர்த்தியின் தூரத்துத் தோற்றமே இலக்கிய வாசகனுக்கு இதுவரை கிடைத்து வந்திருப்பது. ஓர் ஆளுமையாக அவரது அண்மைச் சித்திரத்தைத் தனது நேர் அனுபவங்கள் வாயிலாக உருவாக்குகிறார் சுந்தர ராமசாமி. ந. பிச்சமூர்த்தியின் வாசகனாக மட்டுமல்லாது அவரது இலக்கிய நன்னடத்தை மீது மதிப்புக் கொண்டவராகவும் சுந்தர ராமசாமி வெளிப்படுகிறார். வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் அதிக இடைவெளியில்லாத மனிதராக பிச்சமூர்த்தியை அவர் காட்டுகிறார். எழுத்தை முகாந்திரமாக வைத்துத் தன்னை முன்னிருத்திக் கொள்ளாதவராகவும் எழுத்தைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது என்ற நம்பிக்கை கொண்ட இலட்சியவாதியாகவும் ந. பிச்சமூர்த்தியைச் சித்தரிக்கிறார் சுந்தர ராமசாமி. இந்தச் சித்திரம் பிச்சமூர்த்தியின் ஆக்கங்களை நெருக்கமாகப் புரிந்துகொள்ளவும் அவரது ஆளுமையுடன் பொருத்தி விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.
No product review yet. Be the first to review this product.