அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற்பனை செய்துகொண்ட பார்வையாளர்களுக்குத் தன் கதையைக் கூற அவன் முடிவெடுக்க, பங்களாவின் ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆழ்ந்த வலியும் வறண்ட நகைச்சுவையும் தளும்பும் பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல், வாசகர்களை ஆட்படுத்தித் துன்புறுத்தும் ஒரு குடும்ப நாடகமாக, அனீஸ் சலீமை நம் காலத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட கதைசொல்லிகளில் ஒருவரென, உறுதிப்படுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.