முரசொலி செல்வம் அவர்கள் முரசொலிக்கு ஆசிரியர் மட்டுமல்ல, எனக்கு வழிகாட்டியாகவும் இருக்கக் கூடியவர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தனது மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக என்னிடம் தயங்காமல் சொல்வார்கள். நானும் அவர்களிடம் ஆலோசனைகள் பெறுவதில் ஆர்வமாக இருப்பேன். கழகத்துக்கு, முரசொலிக்குக் கிடைத்த உண்மையான பொக்கிஷம் தான், 'முரசொலி சில நினைவலைகள்' என்ற நூலாகும்! கழகத்தவர்க்கு இது பொக்கிஷம். மூத்தவர்களுக்கு இது பழைய நாட்குறிப்பு. இளைஞர்களுக்கு எதிர்கால வழிகாட்டி. ஊடகத் துறை நண்பர்களுக்கு, இது பாடப்புத்தகம். புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கு இது
ரகசியங்களின் தொகுப்பு. மொத்தமாய்ச் சொல்ல வேண்டுமானால், கலைஞர் அவர்களின் இன்னொரு நெஞ்சுக்கு நீதி'! திராவிட இயக்கத்தின் தீரமிகு தளகர்த்தரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாக 'செல்வம்' என்று பெயர் சூட்டியது முதல், பேரறிஞர் அண்ணா அவர்கள், 'செல்வா' என்று செல்லமாக அழைப்பது வரை, அனைத்தையும் சொல்லி - மகிழ்ந்தார் கலைஞர் அவர்கள். அத்தகைய வரலாறாகவே வாழ்பவர் செல்வம் அவர்கள். போற்றுதலுக்குரிய கலைஞரும், மரியாதைக்குரிய மாறனும் இல்லாத நிலையில், அவர்களது இடத்தில் இருந்து வழிநடத்தும் அன்புரிக்குரியவராக செல்வம் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை, எனக்குக் கிடைத்த பெருமையாகவே நினைக்கிறேன்.
அன்புடன் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழக முதல்வர்,
தி.மு.கழகத் தலைவர்
No product review yet. Be the first to review this product.